22 Dec 2022

தடையறத் தாக்கல்

தடையறத் தாக்கல்

இடி இடிக்கிறது

நேரம் கடந்து கொண்டிருக்கிறது

முக்கிய தகவல் ஒன்று தேவையாயிருக்கிறது

அலைபேசியை இயக்க தயக்கமாயிருக்கிறது

மின்னல் நிலத்தில் பட்டுத் தெறிக்கிறது

பெருமழையொன்று பெருங்காற்றோடு

பெருமரத்தைப் பெயர்த்தபடி பெய்கிறது

எல்லாம் ஓய்ந்து

நிசப்த்தத்தின் மடியில் அமர்ந்து

அலைபேசியின் முலை எடுத்து

வாயருகே கொண்டு சென்றால்

பூனை ஒன்று குறுக்கே போகிறது

சகுனத் தடைகளுக்குக் கணக்கில்லை

*****

No comments:

Post a Comment