22 Dec 2022

பிரியத்தின் திட்டுதல்கள்

பிரியத்தின் திட்டுதல்கள்

என்னைக் கெட்டவன் என்று

திட்டிய போதே

புரிந்து விட்டது

நீ

நல்லவனாக இருக்க

பிரியப்படுகிறாய்

*****

காரணப்பெயர்கள்

காலம் முழுவதும்

இன்னொருத்தியோடு வாழ்ந்த பெரியப்பாவுக்கு

கவரிமான் என்றொரு பெயருமுண்டு

சக்களத்தியைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த

பெரியம்மாவுக்குத்தான் பாவம் எந்தப் பெயருமில்லை

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...