எட்டுப்பட்டித் தாத்தா
கோடையில் வெயில் அதிகம் என்கிறார்
குடிக்கும் பன்னீர் சோடாவை
அதிகரித்தபடி
நவம்பரில் மழை அதிகம் என்கிறார்
அரைமணி நேரத்திற்கு ஒரு முறை
தேநீர்க் குவளையை
இடிச்சத்தத்தோடு உறிஞ்சியபடி
பனிக்காலத்திலும் குளிர்
அதிகம் என்கிறார்
போர்வையை நெடுநேரம்
இழுத்துப் போர்த்தி உறங்கியபடி
எல்லாம் அதிகம் என்றாலும்
எதிலும் குறைவில்லை
ரெண்டு தாரம் கட்டையில் போயி
மூன்றாம் தாரத்தோடு இருக்கும்
எட்டுப்பட்டித் தாத்தாவுக்கு
*****
No comments:
Post a Comment