25 Dec 2022

மனப்பாத்திரத்தில் கொதிக்கின்ற எண்ணெய்

மனப்பாத்திரத்தில் கொதிக்கின்ற எண்ணெய்

அப்படியே ஏற்றுக் கொள்வது நல்லது

முரண்பாடுகளைச் சந்திக்க வேண்டாம் என்றால்

அதுதான் நல்லது

எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்று

யோசிக்க வேண்டாம் என்றாலும்

அதுதான் நல்லது

பதற்றங்களைப் பார்க்காமல் இருப்பதற்கும்

தடுமாற்றங்களைச் சந்திக்காமல் இருப்பதற்கும்

அதுவே நல்லது

பிரச்சனைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால்

அதை விட நல்லது ஏதுமில்லை

அப்படியே ஏற்றுக் கொள்வதில்

மேலதிக நன்மை ஒன்றும் இருக்கிறது

நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும்

அதுவே சொல்லி விடும்

அப்படியே ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு

மனப்பாத்திரத்தில் கொதிக்கின்ற எண்ணெயில்

ஒரு துளி நீர் விழுகையில்

சுர் என்ற சத்தம் எழுப்பாமல் இருக்க தெரிந்திருக்க வேண்டும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...