25 Dec 2022

அருகருகே எதிர்நிலையில் நிற்பவர்கள்

அருகருகே எதிர்நிலையில் நிற்பவர்கள்

நீ ஏற்கவில்லை என்பதற்காக

நான் நினைப்பது தவறென்று ஆகி விடாது

உன்னுடைய ஏற்பின்மையை

நான் மறுக்க விரும்பவில்லை

நீ அப்படியே இருந்துகொள்

நான் இப்படியே இருந்து கொள்கிறேன்

என்னை நீ ஏற்கவில்லை என்பதற்காக

நான் உன்னை விரோதியாக்க மாட்டேன்

பதிலுக்கு அதே போல் நீயும் இருந்தால்

எவ்வளவு மகிழ்வேன் தெரியுமா

உன்னை ஏற்காக

என்னை உன் விரோதி என்று கூறித் திரியாதே

என்னைப் பற்றி எப்போதும் சிந்தித்து

எதையாவது உளறிக் கொண்டிராதே

உன்னை நான் எப்போதாவது நினைக்கிறேன்

அப்போதும் கருத்துகளால்

நாம் எதிர்நிலையில் இருப்பதாகவும்

மனிதர்களாக நாம் அருகில் இருப்பதாகவும்

உனக்கும் இந்த உலகுக்கும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...