21 Dec 2022

யாவினும் ஒரு பயன்

யாவினும் ஒரு பயன்

மண்டையில் என்ன களிமண்ணா

ஒரு டிப்பர்

எழுநூறு ரூபாய் தெரியுமா

போடா விளக்கெண்ணெய் என்றால்

விளக்கெண்ணெய் விலை தெரியுமா

வெண்ணெய் என்று சொல்வதற்கு முன்

விலை தெரிந்து கொள்

எருமையோ கழுதையோ

இன்ன பிறவோ

சோற்றில் என்ன தண்டச்சோறு

எல்லாவற்றிலும் ஒரு பயன் இருக்கிறது

பயனற்ற உன் சொற்களைப் போலல்ல

*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...