21 Dec 2022

யாருமற்ற கடல்

யாருமற்ற கடல்

என்னைப் பார்க்க

அலைகள் வந்து கொண்டே இருக்கின்றன

என்றார் அவர்

அலைகளைப் பார்க்க

மனிதர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்

என்றேன் அவன்

அதற்குப் பின் ஏற்பட்ட

கருத்து முரண்பாடுகளில்

இருவரும் கடற்கரையில் சந்திப்பதைத்

தவிர்த்துக் கொண்டோம்

பிறகு அலைகள் இல்லாத

பிற இடங்களிலும்

சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டோம்

இப்போது அலைகடல் இல்லாத

ஆழத்தில் அமைதி கொண்டதாய்க் கிடக்கிறது

வாழ்க்கைக் கடல்

வருவோர் போவோர்

வேடிக்கை பார்ப்போர் யாருமின்றி

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...