8 Nov 2022

ராட்சச மாமன் என்பவர் மாமனாரா?

ராட்சச மாமன் என்பவர் மாமனாரா?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.

உண்மைதான், வைரமாகவும் இருக்கலாம் என்றேன் நான்.

*****

தங்க நகை வாங்கினால் செய்கூலி போடுகிறார்கள்.

நகை செய்தவரைக் கூப்பிடு, கூலியைக் கேட்க வேண்டும் என்றால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்.

சரிதான் தொலைந்து போ என்றால் சேதாரம் என்கிறார்கள்.

சேதாரம் ஆன நகையை ஏன் என்னிடம் விற்கிறீர்கள் என்றால் கடையை விட்டு வெளியே போ என மிரட்டல் விடுகிறார்கள்.

என்ன செய்வது என்று புரியாமல் இத்தனை நாட்களாக நகை எடுக்காமல் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

*****

ராட்சச மாமனே

என்ன அழகான கற்பனை

போடா

எல்லா மாமனும் அப்படித்தான்

நான் மாமனாரைச் சொல்லவில்லை

*****

என்ன மழை

என்ன மழை

என்ன மழை

ஐப்பசியும் கார்த்திகையும் வந்தால் வானுக்கு அப்படி என்ன கவலையோ?

*****

இந்த வருடம்தான் கர்நாடகத்திடம் அணையைத் திறவுங்கள் என்று கெஞ்ச வேண்டாமல் போனது.

அணை தாங்காது என்று அவர்களே திறந்து விட்டு விட்டார்கள்.

கனமழையை நல்ல வெயிட்டாகத் ‘தட்ஸ் மை பாய்’ என்று பாராட்டத் தோன்றியது எனக்கு.

*****

ஒரு நல்ல கணவராக இருக்க ஆசைப்படுபவர்

அடிக்கடி மனைவியிடம்

என் மன உளைச்சலை அதிகரித்து விடாதே என்று கெஞ்சத்தான் வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் வன்கொடுமை வழக்கில் உள்ளே போக வேண்டியிருக்கும்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...