8 Nov 2022

ஜாதியைக் கண்டுபிடித்து விடும்பெரிய மனுஷன்கள்

ஜாதியைக் கண்டுபிடித்து விடும்பெரிய மனுஷன்கள்

இலவசமாக அரிசியைத் தவிர

எதை வேண்டுமானாலும் தாருங்கள் என்கிறார்கள் தமிழ் மக்கள்.

அரசாங்கமும் அரிசியைத் தவிர வேறு எதையும் இலவசமாகத் தர முடியாது என்கிறது.

*****

முன்பெல்லாம் பிச்சைக்காரர்கள் அரிசி போட்டாலும் வாங்கிக் கொள்வார்கள்.

இப்போது சோறுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

*****

நீதான் ரேஷன் அரிசியைச் சாப்பிடுவதில்லையே, பிறகேன் வாங்கி வைத்துக் கொள்கிறாய் என்றால் மனைவி கோபித்துக் கொள்கிறார்.

கோயிலுக்குக் கொடுக்க,

அக்கம் பக்கத்தில் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று கொடுக்க,

சொந்தக்காரர்கள் வந்தால் சமைத்துப் போட என்று

ரேஷன் அரிசியில் அவருக்கு ஆயிரத்தெட்டு சமாச்சாரங்கள் இருக்கின்றனவாம்.

*****

வயது நாற்பது ஆகிறது.

பாதி முடி நரைத்து விட்டது.

இன்னும் ஜாதகம் பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டுமாம்.

ஜாதி பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டுமாம்.

எப்படியும் ஐம்பதுக்குள் திருமணம் ஆக வாழ்த்துகள் என்று வாழ்த்தி விட்டு வந்துவிட்டேன்.

*****

எப்படியும் ஜாதியைக் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

நானும் லூசுத்தனமாக உளறித் தொலைத்து விடுகிறேன்.

இதைத் தவிர்ப்பதற்காகவே யார் என் பெயரைக் கேட்டாலும் சாதியின் பெயரைச் சொல்லி விடுகிறேன். அதுதான் என் பெயர் என்று நம்பி ஏமாந்து போய் விடுகிறார்கள்.

பிறகு என்ன ஜாதி என்று கேட்கும் போது என் பெயரைச் சொல்லி விடுகிறேன். அப்போது அவர்கள் வாயைப் பிளந்து கொண்டு போய் விடுகிறார்கள்.

அப்படியும் ஒரு ஜாதி இருக்கிறதா என்று ஒரு சிலர் கேட்கும் போது நான் இருக்கும் போது அப்படி ஒரு ஜாதி இருக்காதா என்பேன். அத்தோடு விட்டு விடுகிறார்கள்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...