9 Nov 2022

பெயர் கொண்டு வாழ்தல்

பெயர் கொண்டு வாழ்தல்

ஒண்ணாப்பு அலமேலு டீச்சர்தான்

என் பெயர் சொல்லி அழகாகக் கூப்பிட்டது

அம்மா கூட என் பெயர் சொல்லிக் கூப்பிடவில்லை

சின்னான் என்றே கூப்பிடுவாள்

அப்பா குட்டான் என்பார்

அண்ணன்கள் கொட்டாப்புளி என்பார்கள்

அக்காக்கள் கட்டப்புள்ள என்பார்கள்

அச்சுதமங்கலம் அத்தை தக்கோண்டு என்பாள்

கோட்டூர் அம்மாயி கோலா உருண்டை எனக் கொஞ்சுவாள்

மிலிட்டிரி பெரியப்பா சோட்டாபாய் என்பார்

பள்ளிக்கூடத்தில் கொழுக்கட்டை என்பார்கள்

காலேஜிலும் விட்டபாடில்லை கோலிகுண்டு என்பார்கள்

ஆபிஸிலும் தொடரத்தான் செய்தது அப்புகுண்டு என்று

ஒவ்வோர் இடத்திலும்

ஒவ்வோர் பேர் கொண்டு வாழ்வது

எல்லாருக்கும் வாய்க்குமா என்ன

கையெழுத்திடும் போது மறவாமல்

என் பெயர் எழுதி கையொப்பமிடுவேன் அழகுபெருமாள் என்று

பத்து அவதாரம் எடுத்துப் பெயர் கொண்டது போல

பெயரில் எழும் மகிழ்ச்சியை காட்டிக் கொள்ளாமல்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...