6 Nov 2022

எல்லாம் வாங்கும் எலான் மஸ்க்

எல்லாம் வாங்கும் எலான் மஸ்க்

எலான் மஸ்க் நினைத்தால் எதையும் வாங்குவார் என்றார் நண்பர்.

எதையும் என்றால்

மஞ்சள்

குங்குமம்

உங்கள் மனைவியையுமா என்றேன்.

நண்பர் அதற்குப் பின் பேசவில்லை.

ஓர் உரையாடலைத் துவங்கி விட்டுப் பேசாமல் இருப்பது நியாயமா?

*****

அப்பாவும் அதானியும்

எங்கள் அப்பா பயங்கரமாகக் கடன் வாங்குவார்.

அவர் கடன் வாங்குவதைப் பார்த்து எங்கள் அம்மா, தங்கை, நான் உட்பட எல்லாரும் பயந்திருக்கிறோம். ஆனால் அப்பா பயப்பட மாட்டார்.

இப்போது அதானியைப் பார்க்கும் போது எங்கள் அப்பாவைப் பார்ப்பதைப் போல இருக்கிறது.

பயப்படாமல் கடன் வாங்குகிறார். அவருக்குக் கடன் கொடுப்பவர்கள் பயந்து கொண்டே இருக்கிறார்கள். என் அப்பா விசயத்திலும் இதுதான் நடந்தது.

கடன் வாங்குபவர்களுக்குப் பயம் இருக்காதோ?

கடன் வாங்காமல் இருப்பதால்தான் எனக்கு எதைக் கண்டாலும் பயமாக இருக்கிறதோ?

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...