7 Nov 2022

ஏன் எண்களைப் பச்சை குத்திக் கொள்ளக் கூடாது?!

ஏன் எண்களைப் பச்சை குத்திக் கொள்ளக் கூடாது?!

அப்படியா பெயர்கள் மறந்து விடும்?

கையில் பச்சைக் குத்திக் கொள்கிறார்கள்.

யாராவது ஆதார் எண்ணைப் பச்சைக் குத்தியிருக்கிறார்களா என்று பார்க்கிறேன்.

ம்ஹூம்! ஒருத்தரும் இல்லை.

எனக்கு அதுதான் அடிக்கடி மறந்து போகிறது.

பச்சைக் குத்திக் கொள்வதற்குப் பயந்து கொண்டு அதை விசிட்டிங் கார்டாக அச்சடித்து எல்லா சட்டைப் பையிலும் வைத்திருக்கிறேன்.

பெயர் மறந்தாலும் ஆதார் எண் மறந்து விடக் கூடாது.

ஆதார் இல்லாத மனிதன் அரை மனிதன்.

*****

உங்கள் புத்தகங்களைப் படிப்பதை விட போட்டித் தேர்வு புத்தகங்களைப் படிப்பது கொடுமையாக இருக்கிறது என்கிறார்கள்.

போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் எழுதும் எழுத்தாளர்களை நான் மனதாரப் பாராட்டிக் கொண்டேன்.

அப்படியாவது நான்கு வாசகர்கள் என் புத்தகங்களைப் படிப்பார்கள் என்று பார்க்கிறேன். நடக்க மாட்டேன்கிறது. அது நடக்காவிட்டாலும் பரவாயில்லை. போட்டித் தேர்வுக்கு என் புத்தகங்களை வைத்து விடாமல் இருக்க வேண்டும்.

*****

என் செருப்பு தேய்ந்து போனதை எதிரில் இருப்பவர் பரிதாபமாகப் பார்க்கிறார்.

அவரிடம் பறிகொடுப்பதற்குப் புதிய செருப்பு இல்லாமைக்கு நானும் வருந்தத்தான் செய்கிறேன்.

வேறென்ன செய்ய முடியும் என்னால்?!

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...