11 Nov 2022

நிற்க வைத்து ஆனந்திப்பவர்கள்

நிற்க வைத்து ஆனந்திப்பவர்கள்

நிறுத்தினால் உட்கார்ந்திருப்பவர்கள் இறங்குவார்கள்

நின்று கொண்டிருக்கும் நான் உட்காரலாம்

எவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்கிறேன்

ஓட்டுநர் நினைத்தால் நிறுத்தலாம்

நான் நின்று கொண்டிருப்பதில்

ஓட்டுநருக்குத் தனி ஆனந்தம் போலும்

நிறுத்தங்களில் கூட நிறுத்தாமல் செல்கிறார்

உட்கார்ந்திருப்பவர்களுக்கும்

இறக்கி விடுங்கள் என்று சொல்லத் தோன்றவில்லை

கடைசியாகப் பேருந்து நிலையம் ஒன்றில் நிறுத்தினார்

எல்லாரும் இறங்கினார்கள்

நான் உட்கார்ந்து கொண்டேன்

நடத்துநர் இறங்குங்கள் என்றார்

நான் உட்கார்ந்திருக்கிறேன் வண்டியைக் கிளப்புங்கள் என்றேன்

மக்கள் பல ஏறி உட்கார இடமின்றி

நின்று கொண்டிருக்கும் போதுதான்

வண்டியைக் கிளப்ப முடியும் என்கிறார்

நிற்க வைப்பதில் நடந்துநருக்கும் ஆனந்தம் போலும்

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...