காலண்டரைப் பொருள் கொள்ளுதல்
சனிக்கிழமையை நாட்காட்டிகளில்
‘Sat’ என்று எழுதியிருக்கிறார்கள். எங்களுக்கு வினைச்சொல் பற்றி பாடம் நடத்திய ஆங்கில
ஆசிரியரின கருத்துப்படி அது sit – sat – sat வரிசையில் வருகிறது. அந்த நாள் முழுவதும்
உட்கார்ந்திருக்கவே வேண்டுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
*****
குற்றவாளிகள் மட்டும்தான்
நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
வழக்கறிஞர்களும், நீதிபதிகளும்
நீதிமன்றத்துக்கு வந்துதான் ஆக வேண்டும்.
*****
விவசாயம் செய்பவர்களைப் பார்த்தால்
ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் நண்பர்.
வயல் வைத்திருக்கிறவர்கள்
வேறு என்ன செய்ய முடியும் என்று எனக்குப் புரியவில்லை.
*****
உலகில் இரண்டு குடும்பங்கள்
இருக்கின்றன.
ஒன்று என் குடும்பம்.
இன்னொன்று மனைவியின் குடும்பம்.
இந்த இரண்டு குடும்பங்களுக்கும்
இடையில் நடந்த சண்டைகளைப் போல உலகப்போர்கள் கூட நடந்ததில்லை.
அமெரிக்க – ரஷ்ய பனிப்போர்கள்
எல்லாம் அப்புறம்தான்.
இதனால்தான் ஓர் ஆண் ஹிட்லரைப்
போலவே முசோலினியைப் போலவே இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment