11 Nov 2022

விஷேஷ வேஷப் பிறவிகள்

விஷேஷ வேஷப் பிறவிகள்

கவிதை எழுதி

கவிஞராகத் திரிந்து கொள்

ஓவியம் எழுதும்

ஓவியராக இருந்தாலும் சரி

இசைப்பின் ஞானியாக

உரைப்பதின் வேந்தராக

எப்படியிருப்பினும் சரி

மெகா ஸ்டாராகும்

நடிகராக இருந்தாலும் சரி

எவ்வளவு கலைகள்

ஒவ்வொன்றாகச் சொல்ல

ஆய கலைகள் அறுபத்து நான்கையும் தாண்டி விட்டதால்

ஏதோ ஒன்றின் கலைஞராக

திகழினும் சரி

கலைகளை ஆளும்

அரசியல் தலையாக விளங்கினும் சரி

தலையில் கொம்பு முளைப்பதில்லை பார்

மரமேறிக் குதிக்க வாலும் முளைப்பதில்லை பார்

சிறு குழந்தையா நீ

உயரத் தூக்கி உச்சி முகர வேண்டியதில்லை பார்

எல்லாரையும் போல் உலகில் அறுநூறு கோடி பேர்

உனக்கு மட்டும் சொத்து சேர வேண்டியதில்லை பார்

வேலையில்லாமல் திரிகிறவர் இருநூறு கோடி பேர்

உன்னை மட்டும் என்னவோ

உலகம் அங்கீகரிக்கவில்லை என்று புலம்ப வேண்டியதில்லை பார்

நாய் வேஷம் போட்டுக் குரைக்கிறாய் என்பதற்காக

எங்களை ஏன் கடிபட சொல்கிறாய்

விஷேஷ வேஷப் பிறவி எடுத்த நீ

*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...