7 Nov 2022

பொங்கலில் கிடக்கும் மிளகா நீங்கள்?

பொங்கலில் கிடக்கும் மிளகா நீங்கள்?

கோபப்பட்டால்தான் மனிதனாக நினைக்கிறார்கள்.

பொறுமையாக இருந்தால் பொங்கலில் கிடக்கும் மிளகைப் போல நினைக்கிறார்கள். கண்டு கொள்வதே இல்லை.

*****

உங்களை அடிக்கடி பார்த்திருக்கிறேனே என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்.

அவர் கண்ணில் படாமல் எப்படி அலுவலகம் போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

*****

செத்துப் போனால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுகிறார்கள். உயிரோடு இருக்கும் வரை ஒரு போஸ்டர் கிடையாது. என்ன மனிதர்களோ?!

*****

திரும்ப திரும்ப அனுப்பினாலும் ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்று பதில் அனுப்புகிறார்கள்.

இப்போது அனுப்புவதில்லை. இனிமேலாவது பிரசுரிக்க இயலாமைக்குச் சந்தோஷமாக இருக்கட்டும்.

*****

இந்த முறையாவது விருதை வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். அவ்வளவு தூரம் பஸ்ஸில் ஏறி வந்து வாங்கிக் கொள்வதற்குக் கையில் பத்து பைசா இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடன் வாங்கிக் கொண்டாவது வந்து வாங்கிப் போய் விடுங்கள் என்கிறார்கள். என்ன செய்வது?

*****

ரேஷனில் அரிசி கொடுக்கிறார்கள்

கிலோ நான்கு ரூபாய்க்கோ,

ஐந்து ரூபாய்க்கோ வெளியில் விற்பதற்கு.

சாமர்த்தியசாலிகள் ஆறு ரூபாய்க்கு விற்பதாகவும் கேள்வி.

*****

மழை பெய்தால் லீவு விட்டு விடுவார்கள் என்றால் மழை பெய்யாத நாட்டில்தான் பள்ளிக்கூடங்களைக் கட்ட வேண்டும்.

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களைச் சவுதியிலோ, துபாயிலோ கட்டி விடலாம்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...