என்றார் என் நண்பர்!
ஆஸ்பிட்டலில் சேர்த்து ஐந்து
லட்சம் செலவாகி விட்டது என்றார்.
அவ்வளவு காஸ்ட்லியான வியாதியை
எங்கு விலை கொடுத்து வாங்கினீர்கள் என்றேன்.
அவருக்கு மாரடைப்பு வந்து
விட்டது.
*****
கெமிக்கல்ஸ்களைச் சாப்பிடுவதால்தான்
நோய் என்கிறார் நண்பர்.
ஆர்கானிக்ஸைச் சாப்பிட்டால்
நோய் வராது என்கிறார்.
அப்படியானால் ஆர்கானிக்ஸைச்
சாப்பிட வேண்டியதுதானே என்றால் கிடைப்பதைத்தானே சாப்பிட முடியும் என்கிறார்.
இவரெல்லாம் கெமிக்கல்ஸைச்
சாப்பிட்டு நோய் வந்தாலும் கெமிக்கல்ஸைத்தான் சாப்பிடுவார். அதாவது நான் மாத்திரைகளைச்
சொல்கிறேன்.
*****
ஒரு மழைக்குத் தாங்குதா சார்
இந்த ஊர் என்கிறார்.
கவலைப்படாதீர்கள் வடிந்து
விடும் என்று ஆறுதல் சொல்லி விட்டு வந்து விட்டேன்.
தங்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள்
வந்தால்தான் இந்த மக்கள் புரட்சி பூபாளம் பாடுகிறார்கள்.
*****
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின்
பெயர் தெரியுமா என்று கேட்டேன்.
தப்பா நெனைச்சுக்காதீங்க
சார், நான் ஜி.கே.வுல வீக் என்கிறார்.
அது சரி, பெயரைத் தெரிந்துவைத்துக்
கொண்டு மட்டும்தான் என்னவாகப் போகிறது? அவர் வீக்காக இருப்பதே நல்லது என்று நினைத்துக்
கொண்டேன்.
*****
No comments:
Post a Comment