13 Nov 2022

அம்மா என்றால் சும்மா இல்லைடா!

அம்மா என்றால் சும்மா இல்லைடா!

வெளியில் என்ன மழை பெய்தால் என்ன? எவ்வளவு வெள்ளம் போனால் என்ன? நீ செகண்ட் டேர்மில் க்ளாஸ் பர்ஸ்ட் எடுக்க படி என்கிறாள் மம்மி.

இதுவே எங்கள் அம்மா என்றால் இப்படி சொல்லியிருக்குமா?

*****

சார், இன்னிக்கு மழை இல்லையே, லீவு கிடையாதுதானே என்று போன் செய்கிறான் ஒரு பயல்.

*****

வெயில் நாட்கள் பிள்ளைகளுக்குப் பிடிப்பதில்லை. லீவு விட மாட்டேன்கிறார்களே.

*****

நேற்று தக்காளி கிலோ 40 ரூபாய்.

இன்று கிலோ 50 ரூபாய்.

டி.வி.யைப் போட்டால் தங்கம் விலை கிராமுக்கு 50 குறைந்தது என்று செய்தி போடுகிறான்.

அதைத் தக்காளிக்காரன் பிடுங்கிக் கொண்டான் போடா என்று டி.வி.யை ஆப் செய்து விட்டு எழுந்திரித்துப் போகிறேன்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...