ரொம்ப நாளைக்கு அப்புறமாக ஒரு மினி சிறுகதை
நான் பாட்டுக்கு எழுதிக்
கொண்டே போனால், படிக்க மாட்டீர்கள் என்பதால் சின்னதாக ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.
படித்துப் பாருங்கள்.
சந்துரு ஓர் ஏழை. அவன் காமினி
என்ற பணக்காரப் பெண்ணைக் காதலித்தான். காமினியின் அப்பா ஓர் ஏழைக்குத் தன் மகளைக் கொடுக்க
முடியாது என்று சொல்லி விட்டார்.
இந்த நாளை உங்கள் டைரியில்
குறித்துக் கொள்ளுங்கள் என்று சந்துரு காமினியின் அப்பாவிடம் சவால் விட்டு ஐந்தே வருடங்களில்
பணக்காரனாகி ஓர் எழைப் பெண்ணைக் கட்டிக் கொள்வான் என்று பார்த்தால் பணக்காரப் பெண்ணையே
கட்டிக் கொண்டான்.
*****
அமைதி காத்தல்!
ஆபிஸில் ரொம்ப வேலை கொடுக்கிறார்கள்
என்று யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மேனேஜரிடமே சொல்லி விட்டேன். சீட்டைக் கிழித்து
விட்டார். இப்போது வீட்டில் மனைவி நிறைய வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறாள். இதை மனைவியிடமே
சொல்லி அவள் பாட்டுக்கு எதையாவது கிழித்து விட்டால் என்ன செய்வது என்று புரியாமல் யாரிடமும்
சொல்லாமல் அமைதி காத்து வருகிறேன். இதைத்தான எல்லா ஆஸ்பிட்டல்களிலும் அற்புதமாக ‘அமைதி
காக்கவும்’ என்று என்ன அழகாக எழுதி வைத்திருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment