15 Nov 2022

அதானி வாங்காமல் இருக்க பிரார்த்தனை

அதானி வாங்காமல் இருக்க பிரார்த்தனை

தக்கார் தகவிலர் என்பது அவரவர் அச்சத்தாற் காணப் படுமா?

*****

பேங்கில் எனக்கு லோன் கொடுக்கும் போதெல்லாம் வட்டி விகிதித்தை ஏற்று விடுகிறார்கள். யாராவது எனக்கு எதிராக சூன்யம் செய்கிறார்களா என்ன? தகடு வைத்துப் பார்க்கலாம் என்று இருக்கறேன்.

*****

நான் ஹவுசிங் லோன் வாங்கவில்லை.

இருந்தாலும் என் ஹவுஸ் ஓனருக்கு இ.எம்.ஐ. கட்டிக் கொண்டிருக்கிறேன்.

அவர் என்னவோ அதை வாடகை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

*****

எலான் மஸ்க் அரசாங்கத்தை வாங்கவில்லையே என்று பாதிக்குப் பாதி அரசு ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எலான் மஸ்க் வாங்காமல் போனால் என்ன? அதானி வாங்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

*****

ரொம்ப காலமாக இருந்தவை பொதுத்துறை வங்கிகள்தான்.

கேட்டால் தனியார்துறை வங்கிகள்தான் முன்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...