15 Nov 2022

தக்காளிச் சோறு என்றால் அவ்வளவு மட்டமா?

தக்காளிச் சோறு என்றால் அவ்வளவு மட்டமா?

நெஞ்சை நக்குவது போல வாட்ஸப் மேசேஜ்கள் அனுப்புவது எப்படி? – என்ற புத்தகத்தை எழுதுவதாக அறிவிப்பு வெளியிட்டேன்.

இப்போதே ஆர்டர்கள் வந்து குவிகின்றன.

*****

தாறு மாறு தக்காளிச் சோறு என்கிறார்களே.

தக்காளிச் சோறு என்றால் அவ்வளவு மட்டமா?

*****

சார் நான் செவ்வாய் கிழமை விரதம்,

நான் வெள்ளிக் கிழமை விரதம் என்கிறார்கள்.

சிலர் சனிக் கிழமை விரதமும் இருக்கிறார்கள்.

வியாழக் கிழமை விரத கேஸ்களும் இருக்கிறார்கள்.

புரட்டாசி மாத விரதங்களும் இருக்கின்றன.

ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதங்கள் இருக்கின்றன.

அசைவ சாப்பாட்டை அன்று மட்டும் சாப்பிட மாட்டார்களாம்.

இதில் அசைவத்தைப் புழங்குவதற்கென்றே தனிப் பாத்திரங்கள் வேறு இருக்கின்றன என்கிறார்கள்.

அது சரி அசைவத்தைச் சாப்பிட தனி வாய், தனி வயிறு என்று ஏதும் வைத்திருக்கிறார்களா என்று கேட்டால் கோபப்படுகிறார்கள்.

*****

சில நேரங்களில் சின்ன சின்ன அனுபவங்களிலும் தத்துவார்த்தம் வந்து சேர்ந்து கொள்கிறது. அப்படி உணவகத்தில் உணவுண்ட போது வந்தது இது.

வருவது வந்து கொண்டுதான் இருக்கின்றன, அதை வேண்டாம் என்பது நாம்தான் என்பதுதான் இதன் மையம்.

இப்போது தத்துவார்த்தம்…

வடை போச்சே என்று புலம்புவதற்கு ஏதுமில்லை.

பொங்கலோடு வடையும் வந்து விடுகிறது.

நீதானே வடை வேண்டாம் என்கிறாய்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...