10 Nov 2022

அனுபவ மருத்துவ பாடம்

அனுபவ மருத்துவ பாடம்

எவ்வளவு மருத்துவரைப் பார்த்திருப்பாய்

எவ்வளவு மருந்துகள் உண்டிருப்பாய்

உன் கொழுப்புக்கு அளவு காண முடியுமோ

சுகர் என்றால் என்னவென்று தெரியுமா

என்று கேட்கிறாய்

எனக்கென்ன தெரியும்

அண்ணாச்சிக் கடையில்

அரை கிலோ ஒரு கிலோ வாங்குவதோடு சரி

சுகர் அதிகமானால் மருந்து போட வேண்டும் என்கிறாய்

அண்ணாச்சி போடுகிறாரா இல்லையா என்று தெரியவில்லை

அவரைத்தான் கேட்க வேண்டும்

இந்தப் பிரச்சனை எதற்கென்று

நான் வெல்லத்திற்கு மாறி விட்டேன்

அண்ணாச்சி கேட்கிறார் ஏனென்று

உன்னை அழைத்துச் சென்று

ஒரு நாள் விளக்கம் கொடுத்தால்

அன்றிலிருந்து அண்ணாச்சி சுகர் விற்பதை விட்டு விடுவார்

வருவாயா வந்து சொல்வாயா சொல்

வந்துச் சொல்லி விட்டு

அண்ணாச்சிக்கும் சுகர்

அண்ணாச்சி கடையிலும் சுகர் என்று

கவிதைத் தனமாகக் கிறுக்கித் தொலைந்து விடாதே

உன் கொழுப்பிற்கு அளவேது என்பது ருதுவாகி விடும்

சுகர் அதுவாகச் சேர்ந்தது

கொழுப்பு நீயாகச் சேர்த்தது என்றாகி விடும்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...