10 Nov 2022

ஆறுக்காகப் போட்ட ஆறு ரூபாய் முதல்

ஆறுக்காகப் போட்ட ஆறு ரூபாய் முதல்

ஆற்றில் தூண்டில் போடுவது அவ்வளவு ஆனந்தம்

கெழுத்தி மாட்டும்

ஜிலேபி சிக்கும்

விராலும் வசமாய்க் கிட்டும்

கொண்டைகளுக்குக் கணக்கிருக்காது

மீன்காரருக்குக் கொடுக்கும்

ஐம்பதும் நூறும் மிச்சமாகும்

சாம்பலில் தடவி காய வைத்து விட்டால்

கருவாட்டுக்காரிக்குக் கொடுக்க வேண்டியதும் மிச்சப்படும்

இப்போதெல்லாம் ஆற்றில் தூண்டில் போடவா முடிகிறது

கருக்கலைத்த சிசு வந்து சிக்குகிறது அடிக்கடி

போலீஸ் கேஸில் பிடித்து விடுவார்களோ என்று

பயமாக அல்லவா இருக்கிறது

வாங்கி வைத்த தூண்டில் அப்படியே இருக்கிறது

ஒரு நல்ல ஆறு கிடைத்தால் தேவலாம்

தூண்டில் வாங்க போட்ட ஆறு ரூபாய் முதல்

வீணாகி விடக் கூடாது பாருங்கள்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...