12 Nov 2022

இப்படிக்கு நான்… என்று நான் எழுதக் கூடாதா?

இப்படிக்கு நான்… என்று நான் எழுதக் கூடாதா?

என்னைப் பொதுக்கூட்டங்களில் பேசி நீங்கள் பார்த்திருக்க முடியாது.

ஒருமுறை எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.

என் பெயர் விகடபாரதி என்றிருப்பதால் நான் நகைச்சுவையாகப் பேசுவேன் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டார்கள். நான் சீரியஸாகப் பேசி விட்டேன். சீரியஸாகப் பேசி விட்டேன் என்று சொல்வதை விடவும் சீரியஸாக எழுதி வைத்ததை வாசித்து விட்டேன்.

இந்த உலகம் என்னை ஒரு காமெடி நடிகராக நினைத்திருந்த வேளையில் நான் ஒரு புரட்சிப் புயல் அஜித் போல நடித்தது தவறாகி விட்டது.

இனிமேல் இது போல் நடிப்பதில்லை என்று முடிவு செய்து அன்றிலிருந்து பொதுக்கூட்டங்களில் பேசுவதை நிறுத்தி விட்டேன்.

இப்போதெல்லாம் யாராவது பொதுக்கூட்டத்தில் பேசினால் வறுத்த நிலக்கடலையை வாயில் போட்டு மென்று கொண்டு ரசிப்பதோடு சரி. அது போன்ற நேரங்களில் அந்த நிலக்கடலை என்ன சுவையாக இருக்கிறது தெரியுமா? இதற்காகவே நான் பொதுக்கூட்டங்களுக்குச் செல்ல வேண்டியதாக இருக்கிறது.

*****

தந்தி நின்றாலும் தினத்தந்தி நிற்காது.

இதைத் தினத்தந்தியில் போடுவார்களா?

தினத்தந்திக்குக் கவிதை மேல் கவிதை எழுதிப் போட்டு ஏமாந்து போகிறேன்.

கவிதையைப் போட்டு ஒரு பத்து ரூபாயை அனுப்பினால் குறைந்தா போய் விடுவார்கள்.

*****

நான் முதலில் கவிதை எழுதிய போது அதில் நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தன.

இப்போது பரவாயில்லை.

பிழைகள் அறவே நீங்கும் வரை எழுதிக் கொண்டிருப்பேன்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...