4 Nov 2022

கம்பெனியின் லாப ரகசியம்

கம்பெனியின் லாப ரகசியம்

எவ்வளவு குறைவாகச் செய்ய முடியுமோ

அவ்வளவு குறைவாகச் செய்வதற்குக் கூட்டணி

ஒருவர் நலனில் மற்றொருவருக்கு அவ்வளவு அக்கறை

ஏமாற்றுவது வெளியில் தெரிந்தால்

கூடி வந்து காப்பாற்ற கூட்டம் வேண்டுமே

கூடி நின்று பேசுவதற்குக் கணிசமான நேரம் ஆனால்

வேலை நேரமும் கணிசமாகக் குறைந்து விடுமல்லவா

ஆகவே கூடிப் பேசுதல் என்பது

ஒரு மாங்காயில் இரண்டு தேங்காய் போல

எப்படியோ ஒவ்வொரு நாளையும் ஏமாற்றி

சாமர்த்தியமாக வீடு வந்தால்

உழைத்த களைப்பின்றி வீட்டு வேலைகள் பார்க்கலாம்

வீட்டு வேலைகள் பார்த்தால் வீட்டை உயர்த்தலாம்

அலுவலக வேலை பார்த்து

அலுவலத்தை உயர்த்த முடியுமோ சொல்லுங்கள்

அப்படியே நாற்பது வருடம் நாற்காலி தேய்த்தால்

நாற்காலிக்கு மட்டும் தேய்மானம்

வேலை பார்த்திருந்தால் அத்தனை கருவிகளுக்கும் தேய்மானம்

கம்பெனிக்கு லாபமில்லை என்று சொல்ல முடியாது

ஒருவர் ஓய்வு பெற்றால்

ஒரு நாற்காலி மட்டும் மாற்றினால் போதுமானது

இருவர் ஓய்வு பெற்றால்

இரண்டு நாற்காலிகள் மாற்றினால் போதுமானது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...