3 Nov 2022

தலைவலிக்கு விஷேச மாத்திரை

தலைவலிக்கு விஷேச மாத்திரை

தலைவலி

ஒரு அனாசின் அல்லது சாரிடான் இருக்குமா என்று கேட்டவரிடம்

வேறொன்று இருக்கிறது என்றன்.

கொடுங்கள் ஐயா (சார்) என்றார்.

கொடுத்ததை விழுங்கி விட்டு

அடுத்த இரண்டு நிமிடத்தில் தலைவலி போய் விட்டது என்றார்.

தலைவலி மாத்திரை என்று

புளிப்பு மிட்டாயைக் கொடுத்தாலும்

தலைவலி போகும் என்று நான் கண்டு கொண்ட நாள் அன்றுதான்.

*****

ஐயா (சார்) அந்தக் கோயிலுக்குப் போய் பாருங்கள், எல்லா பிரச்சனைகளும் தீரும் என்றார்.

எனக்குதான் எந்தப் பிரச்சனைகளும் இல்லையே என்றேன்.

போய் வாருங்கள். பிரச்சனைகள் வரும். பிறகு தீரும் என்றார்.

இப்படித் தெளிவாகச் சொன்னால்தானே புரியும்.

அது எந்தக் கோயில் என்பதை இன்னொரு நாள் சாவகாசமாகச் சொல்கிறேன். இப்போதே நீங்கள் பிரச்சனைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

*****

நீங்கள் என்னைப் பெண் பார்க்க வந்த போது என்ன நினைத்தீர்கள் என்றார் மனைவி.

இந்தப் பெண்ணாவது அமைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் என்றேன்.

பொட்டென்று பொடணியில் போட்டார் பாருங்கள் மனைவி.

நான் அந்தப் பதிலைச் சொல்லியிருக்கக் கூடாதோ?

*****

நான் அழகாக இருப்பதற்கு ஒரு டிப்ஸ் தாருங்கள் என்பவரிடம்

என்னை உங்களோடு கூட்டிச் செல்லுங்கள் என்றா சொல்ல முடியும்?

*****

இன்று ஒரு நாள் கோதுமை தோசை சாப்பிடுங்கள் என்கிறார் மனைவி.

முடியாது என்றா சொல்ல முடியும்.

காவிரி வெற்றிலைக்குக் கங்கை நதிப்புறத்துக் கோதுமை பண்டத்தை மாறு கொள்வோம் என்று பாரதியே சொல்லி விட்ட பிறகு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?

சாப்பிட்டு விட்டு எங்கள் வீட்டு கோதுமை தோசைக்குப்பக்கத்து வீட்டு இட்டிலி தோசையை மாறு கொள்வோம் என்று உற்சாகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...