1 Nov 2022

பெய்யெனப் பெய்யும் மழை

 

பெய்யெனப் பெய்யும் மழை

சின்ன மழையென்றால் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விட்டு விடுகிறார்கள்.

பெரிய மழை என்றால் பள்ளிக்கூடத்தைத் திறந்து முகாம் அமைக்கிறார்கள்.

*****

பள்ளிக்கு விடுமுறை என்றால் பிள்ளைகளை விட ஆசிரியர்களுக்கு அதிக சந்தோஷமோ? # ரொம்ப நாள் சந்தேகம்.

*****

இன்றைக்கும் விடுமுறை விட்டு விட்டார்களா என்று பள்ளிக்கூடத்துக்கு நாவல் பழம் விற்க வரும் பாட்டி ஏமாந்துதான் போகிறார்.

என்ன செய்வது நாளைக்காவது இந்த மழையை வராமல் இருக்கச் சொல்லுங்கள் பாட்டி.

*****

இப்படி மழை பெய்தால் விடுமுறை விடுகிறார்களே?

சிரபுஞ்சியில் என்ன செய்வார்கள்?

இது எனக்கு ரொம்ப நாள் சந்தேகம்.

*****

மழை பெய்தால்தான் விடுமுறை என்றால்,

மழை மறைவுப் பிரதேசங்களிலும், வறட்சியான பகுதிகளும், பாலைவன பிரதேசங்களிலும் படிக்கும் குழந்தைகள் என்னதான் செய்வார்கள்?

கருணையோடு மழை அங்கும் சில நாட்கள் சென்று வேண்டும் என்று மழையிடம் பிரார்த்திக்கிறேன்.

*****

நாங்கள் படித்த காலத்தில் மழை பெய்தால் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை இல்லை என்று தாத்தா புலம்பிக் கொண்டிருக்கிறார்.

தாத்தாவின் புலம்பலைத் தீர்க்க விரைவில் அவரை ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் என்று இருக்கிறேன்.

*****

பெய்து விடுமுறை விட வைப்பதும் விடுமுறை விட்டால்

பெய்யாமல் போவதும் எல்லாம் மழை

என்று எழுதுவதற்குத் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து வர வேண்டும்.

*****

எங்கும் மழை என்பதே பேச்சு

பள்ளிக்கூடம் விடுமுறை என்பது உறுதியாச்சு

என்பதை பாரதி எழுத வேண்டும் என்றாலும் நூறாண்டுகளைக் கடந்து வர வேண்டும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...