1 Nov 2022

எதுவும் மாறவில்லை! எல்லாம் மாறி விட்டது!

எதுவும் மாறவில்லை! எல்லாம் மாறி விட்டது!

படித்தால் வாழ்க்கை மாறும் என்கிறார்கள்.

எங்கே மாறுகிறது?

அதே கோடை, அதே குளிர், அதே மழை.

மற்றும்

அதே சலிப்பு, அதே அலுப்பு.

எதுவும் மாறவில்லை.

படிக்கின்ற முறை மட்டும் புத்தகம், பி.டி.எப்., கிண்டில் என்று மாறி விட்டது.

*****

படித்தால் வேலைக்குப் போகலாம் என்றார்கள்.

அதை நம்பி படித்ததால் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

நம்பாமல் படிக்காமல் இருந்திருந்தால் அரசியல்வாதியாகி இருப்பேன்.

*****

பொன்னி நதி பார்க்கணுமே

திருப்பூர் பக்கம் பார்த்தால் சாயக் கழிவாக இருக்கிறது.

எங்கள் ஊர் பக்கம் பார்த்தால் சாக்கடைக் கழிவாக இருக்கிறது.

உங்கள் ஊர் பக்கம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

*****

தமிழ் படிப்பதில்லை. இங்கிலீஷில் நிறைய படிப்பேன் என்கிறார்கள்.

எதை என்றால் காஸ்மோபாலிடன் என்கிறார்கள்.

எங்களூரில் பள்ளிக்கூடம் எட்டிப் பார்க்காதவர்களே ராணி வராந்திரியை வளைத்து வளைத்துப் படிப்பார்கள்.

*****

செய்தித்தாளைக் கையில் வைத்துக் கொண்டு படிப்பதைப் பார்த்தால், நீங்கள் இன்னுமா பேப்பர் படிக்கிறீர்கள் என்கிறார்கள்.

அவர்களாக நிறுத்தும் வரை படிப்பேன்.

அவர்கள் நிறுத்தி விட்டால் டீக்கடைக்காரர்கள் என்ன செய்வார்கள்?

வடை, போண்டா, சமோசா மடிக்க காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வந்து விடும் என்று நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...