17 Oct 2022

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போகலாமா?

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போகலாமா?

கல்யாணம் கட்டிக் கொள்வதென்றால் ஒவ்வொருத்தனுக்கும் எவ்வளவு ஆசை. முகத்தில் ஒரு பூரிப்பு. கல்யாணம் ஆகப் போகிறது என்று தெரிந்தால் ஒரு சுற்று உடல் பெருத்து விடுகிறது. திடீரென்று அவ்வளவு சதையை எந்தப் பிராய்லர் கடையில் வாங்கிப் பூசிக் கொள்கிறார்களோ?

கல்யாணப் பத்திரிகையை எத்தனை வகைகளில் எத்தனை டிசைன்களில் அச்சடிக்கிறார்கள் அதுவும் இந்த டிஜிட்டல் யுகத்தில். மார்க் சக்கர்பெர்க்குத் தெரிந்தால் கோபிப்பார் என்று யோசிப்பது கூட இல்லை.

வாட்ஸாப்பில் வித விதமான ஸ்டேட்டஸ்கள். இது மார்க் சக்கர்பெர்க்கை மகிழ்விக்கக் கூடும். இவ்வளவு சுகமான ராகங்களும் கொடூரமான குத்துகளும் ஒரு மொழியின் இசையில் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள செய்கிறார்கள்.

வாட்ஸாப்பில் பேசுகிறார்கள், கொஞ்சுகிறார்கள், குலாவுகிறார்கள், வாழ்க்கை நடத்துகிறார்கள். அதற்குள் கருமம் பிடித்த கல்யாணம் நடந்து எல்லாவற்றையும் கெடுத்து விடுகிறது.

“ஓ என் அருமை நண்பா! மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை!” (ஹாய் ஹேப்பி மேரேஜ் லைப்!) என்று வாழ்த்தினால், “போடாங்… … … ” எனத் துவங்கிக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு சளியைக் காறி வாஷ் பேஷனில் துப்பி விட்டு ஒடிப் போகிறான்.

கல்யாணம் ஆன பின் என்னதான் நடக்கிறதோ? வாட்ஸாப்பைப் பார்த்தால் Last Seen அவனது கல்யாணத்திற்கு முதல் நாள் காட்டுகிறது.

‘கல்யாணந்தாம் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?’ என்று அவன் வைத்திருந்த ஸ்டேட்டஸை இப்போது நினைத்தால் எவ்வளவு தீர்க்க தரிசனமாக வைத்திருந்திருக்கிறான் கல்யாண வாழ்த்தைக் கேட்டு ஓடிப் போகும் கல்யாணப் பிரியன்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...