17 Oct 2022

அலைபேசியம்மா அலைபேசி (குழந்தைப் பாடல்கள்)

அலைபேசியம்மா அலைபேசி (குழந்தைப் பாடல்கள்)

கைவீசம்மா கைவீசு

கைவீசம்மா கைவீசு

கடைக்குப் போகலாம் கைவீசு

மிட்டாய் வாங்கலாம் கைவீசு

மெதுவாய்த் தின்னலாம் கைவீசு

என்று பாடினால் குழந்தைகள் முறைக்கின்றன

அலைபேசியம்மா அலைபேசி

அமேசானில் வாங்கலாம் அலைபேசி

பிளிப்கார்டிலும் வாங்கலாம் அலைபேசி

ஆர்டர் போட அலைபேசி

அழகாய் வீடு தேடி வர வைக்கும் அலைபேசி

பர்க்கர் தரும் அலைபேசி

பீட்சாவும் தரும் அலைபேசி

வேகமாய்த் தின்ன வைக்கும் அலைபேசி

விரைவாய் வர வைக்கும் அலைபேசி

தின்றதைப் பகிர வைக்கும் அலைபேசி

தினம் தினம் லைக்ஸ் வாங்கித் தரும் அலைபேசி

என்று குழந்தைகள் பாடினால் நான் முறைக்க முடியுமோ

*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...