22 Oct 2022

மனைவிக்கு ஒவ்வொரு நாளும் வேலை!

மனைவிக்கு ஒவ்வொரு நாளும் வேலை!

அடேங்கப்பா! மனைவிக்குப் புடவை எடுப்பதென்றால் ஒரு மாபெரும் ரசிகத் தன்மை வேண்டும்.

இந்த நிறத்தில் அந்த டிசைன் இருக்க வேண்டும் என்பார்.

இந்த டிசைனில் அந்த நிறம் இருக்க வேண்டும் என்பார்.

நிறமும் டிசைனும் பொருந்தி வந்தால் பூனம் புடவையாக இருக்க வேண்டும் என்பார்.

பூனம் புடவை ஒத்து வந்து விட்டால் இது போல சில்க் காட்டனில் இல்லையா என்பார்.

அதுவும் ஒத்து வந்து விட்டால் பிராசோ புடவையில் இப்படியில்லையா, வாயில் புடவையில் அப்படியில்லையா என்பார்.

சரிதான் போ என்று எல்லா நிறத்திலும் எல்லா டிசைனிலும் எல்லா வகைப் புடவைகளிலும் ஒவ்வொன்று எடுத்துக் கொடுத்தாலும் கிளம்பும் முன் அந்தக் கிளிப்பச்சைப் புடவைப் போல வாராது என்பார்.

இதற்கென்றே காத்திருப்பது போல கடைக்காரரும் சட்டென்று பாய்ந்து பட்டென்று அந்தப் புடவையை விரித்துக் காட்டுவார்.

மனைவிக்கென்ன அத்தனை புடவைகளையும் ஒன்றாகச் சேர்த்தா கட்டப் போகிறார்? அத்தனை புடவைகளையும் ஒன்றாக ஒரு பையிலோ பல பையிலோ வைத்துக் கை வலிக்க, தோள் வலிக்க நான்தான் வீடு வரை சுமந்து வர வேண்டும்.

மொத்தமாய்த் துவைப்பதும் மடிப்பதும் அடுக்குவதும் கூட என் வேலை.

ஒவ்வொரு நாளாய் ஒவ்வொரு புடவையாய் கட்டுவதும் மட்டும் அவள் வேலை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அந்த வேலைக்கே பல நேரங்களில் அலுத்துக் கொள்கிறாள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...