பாரதியும் சாதியும்
பாரதியார் சாதியைப் பற்றிப்
பாடியிருக்கிறாரா?
ஏன் பாடாமல்?
தமிழ்ச் சாதியைப் பற்றிப்
பாடியிருக்கிறார்.
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
என்று பாடியிருக்கிறார்.
மேலும்,
பறையருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை என்று
பாடியிருக்கிறார்.
பார்ப்பானை ஐயரென்ற காலமும்
போச்சே என்று பாடியிருக்கிறார்.
அவர் சொல்வதைப் பார்த்தால்
சாதிகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் (பிரிட்டிஷ்காரர்கள்) வந்ததால் உண்டானது போலல்லவா சொல்கிறார்
என்று தோன்றுகிறது.
உங்களுக்கும் அப்படித்தான்
தோன்றுகிறதா?
வேதம் அறிந்தவன் பார்ப்பான்
என்று பாடியிருக்கிறார்.
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
என்று பாடியிருக்கிறார்.
பண்டங்கள் விற்பவன் செட்டி
என்று பாடியிருக்கிறார்.
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி
என்றும் பாடியிருக்கிறார்.
அவரேதான் சாதிகள் இல்லையடி
பாப்பா என்றும் பாடியிருக்கிறார்.
சாதியைப் பாடாத கவிஞனும்
இருக்க முடியுமோ?
*****
No comments:
Post a Comment