எது வரலாறு என்றால்…
‘பொன்னியின் செல்வன்’ வரலாறா
என்கிறார்கள்.
ஜெயமோகன் என்ன சொல்கிறார்
என்றால், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக வெளிவந்தால் சோழர்களின் வரலாற்றை நன்றாகத்
தெரிந்து கொள்ளலாம் என்கிறார்.
கல்கி மற்றும் அதைப் படித்தவர்கள்
என்ன சொல்கிறார் என்றால் அதை வரலாற்றுப் புதினம் என்கிறார்கள்.
வருங்காலத்தில் பொன்னியின்
செல்வன் வரலாறு ஆவதற்கான வாய்ப்பும் உண்டு.
ஆனால் வரலாறு என்பது வேறு.
நம் மக்களுக்குச் சதாசிவ
பண்டாரத்தார், மா. இராசமாணிக்கனார், நீலகண்ட சாஸ்திரி போன்றோரைப் படிக்க ஆர்வம் இருக்குமா?
ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிப்
படிப்பதை வரலாறு ஆக்கிக் கொள்ள நினைத்தால் ‘பொன்னியின் செல்வன்’ம் ஒரு வரலாறே.
*****
No comments:
Post a Comment