1 Oct 2022

புத்தகம் எழுதுவதற்கு ஓர் எளிய முன்வைப்பு

புத்தகம் எழுதுவதற்கு ஓர் எளிய முன்வைப்பு

அண்மையில் ஒரு புத்தகம் படித்தேன். அந்தப் புத்தகம் பற்றிய கருத்துகள் சுமார் 35 பக்கங்கள் வரை நீண்டன. புத்தகம் பதினைந்து பக்கங்களுக்கு உள்ளாகத்தான் இருந்தது.

ஒருவர் 15 பக்கங்கள் எழுதி விட்டால் மீதி 35 பக்கங்களை புத்தகம் பற்றிய கருத்துகளால் நிரப்பி விடலாமோ என்று தோன்றியது.

புத்தகங்களுக்குக் கருத்து வழங்குபவர்களுக்கு 15 பக்கங்கள் வசதியாக இருக்கும். பக்கம் பக்கமாக அதிகம் படிக்க வேண்டியதில்லை. 15 பக்கங்கள் படித்தால் போதும். அதற்கு 15 நிமிடங்கள் போதும். அது பற்றிக் கருத்துச் சொல்ல பத்து நிமிடங்கள் போதும்.

40 நிமிடங்களுக்குள் புத்தகமும் படித்து அதற்கு கருத்தும் சொல்லி வேலை முடிந்து விடுவதால் இது போன்ற புத்தகங்கள் வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

இது போன்ற சூழல் இருக்கும் இப்போதே ஆளாளுக்கு ஒரு புத்தகம் எழுதி விடுவது உசிதம்.

நான் படித்த அந்தப் புத்தகத்தின் பெயரைத்தானே கேட்கிறீர்கள்? அதைச் சொல்வது அவ்வளவு நாகரிகமாக இருக்காது. ஆனாலும் ஒரு புத்தகம் எழுதுவதை எளிமையாக்கிய அந்தப் புத்தகத்திற்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...