16 Oct 2022

ஜேம்ஸ்வெப்பின் பிரேக்கிங் பாய்ண்ட்கள்

ஜேம்ஸ்வெப்பின் பிரேக்கிங் பாய்ண்ட்கள்

ஜேம்ஸ்வெப் என்ற தொலைநோக்கி.

தொலைவில் உள்ளதையெல்லாம் பார்க்க உதவுகிறது.

எவ்வளவு தொலைவு என்றாலும் பார்த்துப் படம் பிடித்துத் தருகிறது.

சபாஷ் மீனா என்பது போல சபாஷ் சரியான தொலைநோக்கிதான் என்று பாராட்டத் தோன்றுகிறது.

ஜெம்ஸ்வெப் தொலைநோக்கி நெப்ட்யூன் கோளை என்னமாகப் படம் பிடித்திருக்கிறது.

உலகிலேயே மிகப் பெரிய தொலைநோக்கி தற்சமயம் அதுதான் என்கிறார்கள் உலகிலேயே பெரிய மலை இமயமலை என்பது போல.

இருந்தாலும் ஊழல் செய்பவர்களை, லஞ்சம் வாங்குபவர்களைப் படம் பிடித்துத் தருமா இந்தத் தொலைநோக்கி?

தமிழ் ராக்கர்ஸைப் போல யாருக்கும் தெரியாமல் புதுப்படங்களைப் படம் பிடிக்க முடியுமா அதனால்?

குருதிப்புனலில் கமல் சொல்வாரே பிரேக்கிங் பாய்ண்ட். இந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் பிரேக்கிங் பாய்ண்ட் அதுதான்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...