14 Oct 2022

ஓடிப் போன தோழர்

ஓடிப் போன தோழர்

உலகம் வெப்பமயமாதலைக் குறைக்க  வேண்டும்.

கல்குவாரிகளையும் மணல் குவாரிகளையும் பாதுகாக்க வேண்டும்.

ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.

லஞ்சம் ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும்.

ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

இயற்கை வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும்.

அநீதியைக் கண்டு பொங்கி எழ வேண்டும்.

பாசிச உணர்வை வேரறுக்க வேண்டும்.

பன்மைத்துவத்துக்குத் துணை நிற்க வேண்டும்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க வேண்டும்.

வசதி வாய்ப்புகள் எல்லாருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.

அதிகார வர்க்கத்தின் கொட்டங்கள் அடக்கப்பட வேண்டும்.

இப்படியெல்லாம் பேசி விட்டு என்ன சொல்கிறீர்கள் தோழர் என்றேன்.

வீட்டுல சொன்னா அம்மா வையும் (திட்டும்), ஆளை விடுங்க தோழர் என்று சப்பாணி பாவனையில் (ஸ்டைலில் – சந்தைக்குப் போகணும், ஆத்தா வையும் என்கிற உடல்மொழியில்) சொல்லி விட்டு ஓடி விட்டார்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...