8 Sept 2022

செருப்புக்காரர்

செருப்புக்காரர்

வாசலெங்கும் செருப்புகள்

விஷேசமாக இருக்குமோ

வீட்டுக்காரரைக் கேட்டால்

அப்படி ஏதுமில்லை என்கிறார்

நடைபயிற்சிக்கு ஒரு செருப்பு என்கிறார்

கழிவறைக்கு ஒரு செருப்பு என்கிறார்

வரவேற்பறைக்கு ஒரு செருப்பு என்கிறார்

சமையலறைக்கு ஒரு செருப்பு என்கிறார்

பூசையறைக்கு ஒரு செருப்பு என்கிறார்

சேமிப்பறைக்கு ஒரு செருப்பு என்கிறார்

கடைக்குச் செல்ல ஒரு செருப்பு என்கிறார்

அலுவலகத்துக்குச் செல்ல ஒரு செருப்பு என்கிறார்

வேடிக்கை பார்க்க செல்ல ஒரு செருப்பு என்கிறார்

கோயிலுக்குச் செல்ல ஒரு செருப்பு என்கிறார்

எல்லா இடத்திற்கும் ஒரே செருப்பு என்றால்

கண்டுபிடித்து விடுவார்கள் என்கிறார்

சரிதான் உங்கள் செருப்பு உங்கள் கால்

ஒவ்வொரு செருப்புக்கும்

ஒவ்வொரு காலா ஒரே காலா என்றால் சிரிக்கிறார்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...