8 Sept 2022

எட்டு ஊர் தண்ணீர்

எட்டு ஊர் தண்ணீர்

சென்னைக்குப் போனது

சித்தப்பாவின் மகள் திருமணத்துக்கு

மதுரைக்குப் போனது

மாமா பெண்ணின் மஞ்சள் நீராட்டுக்கு

நாகர்கோயில் போனது

நார்த்தனாரின் பிரசவத்துக்கு

ஓசூர் போனது

ஓர்ப்படியாள் கிரகப் பிரவேசத்துக்கு

திருப்பதி கூட போயிருக்கிறேன்

தேவியக்காவுக்குத் துணையாக

திருக்கடையூருக்கு

பெரியப்பா அறுபதாம் கல்யாணத்துக்கு

சமைத்துப் போட

எல்லாம் ஊரும்தான் போயிருக்கிறேன்

எல்லா ஊரிலும் வீடும் அறையும்தான் இருக்கிறது

சமைக்க சாமான்களும்

அலம்ப பாத்திரங்களும் அன்றி வேறென்ன இருக்கிறது

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...