2 Sept 2022

உங்களைப் பற்றி எழுத

உங்களைப் பற்றி எழுத

என்னைப் பற்றி எழுதுங்கள் என்று

நிறைய பேர் சொல்கிறார்கள்

எழுத ஊக்கப்படுத்தும் வண்ணம்

பொருட்காட்சியில்

பத்து ரூபாய்க்கு மூன்று பொருட்கள்

நான்கு செட் வீதம் வாங்கித் தருகிறார்கள்

ஐந்து ரூபாய் பேனா ஒன்றை

நான்கு ரீபிள்களோடு

ரோக்கா எழுதும் பேப்பர் ஒரு பண்டலோடு

எல்லாம் வாங்கித் தருகிறார்கள்

ரோட்டுக் கடையில் சோளப்பொறி

தள்ளுவண்டியில் பானிப்பூரி

அப்படியே விடை பெறும் போது

சுற்றத்தாருக்குக் கொடுக்க

சூடான சமோசா பத்து

எல்லாம்தான் வாங்கித் தருகிறார்கள்

வீட்டில் வந்து எழுத ஆரம்பித்தால்

அவர்கள் வாங்கித் தந்த பொருட்கள்

தொண்ணூற்று ஏழு ரூபாய் ஐம்பது பைசா

ரௌண்டாக நூறு ரூபாய்க்கு வாங்கித் தராதவர்கள்

என்று கணக்கெழுதுவதோடு எல்லாம் முடிந்து போகிறது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...