2 Sept 2022

பெட்டிக்கடை சரக்குகள்

பெட்டிக்கடை சரக்குகள்

நான் வாங்க சென்றது

நான்கு குச்சி மிட்டாய்களும்       

குருவி ரொட்டிகள் ஒன்பதும்

வாங்கி வந்ததோ

சட்டையின் ஓரத்தில் பீடாக் கறையும்

நுரையீரலில் முக்கால்வாசி சிகரெட் புகையும்

பெட்டிக் கடைக்குச் செல்ல

பயமாக இருக்கிறது என்றால்

யார் கேட்கிறார்கள்

தாத்தாவுக்கு மூக்குப்பொடியும்

பாட்டிக்கு வெற்றிலை சீவலும்

அப்பாவுக்கு சொக்கலால் பீடியும்

அம்மாவுக்கு கரம் மசாலாவும்

அக்காவுக்கு மஸ்காராவும் என்று

எந்நேரமும் பெட்டிக்கடைக்குப்

போவதும் வருவதுமாக இருக்கிறது

வீட்டில் இல்லாததை வாங்க

பெட்டிக்கடையை விட்டால் வழியேது

எதிர் வீட்டு ஏமாளி அண்ணனுக்கு

இதெங்கே தெரிகிறது

வீட்டிலிருக்கும் தண்ணீரையும் டம்பளரையும்

விட்டு விட்டு

வாட்டர் பாக்கெட்டும் ப்ளாஸ்டிக் டம்பளரும்

வாங்கிக் கொண்டு போகிறது அசடு என்று

அத்தையைப் பார்த்தால் சொல்ல வேண்டும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...