6 Aug 2022

விளையாட்டுப் பாலம்

விளையாட்டுப் பாலம்

பாவம் இந்த பாலம்

தினம்

லட்சம் பேர்

ஆயிரம் ஆட்டோக்கள்

நூறு பஸ்கள்

பல்லாயிரம் டூவீலர்கள்

பலநூறு லோடு வேன்கள்

அதன் முதுகின் மேலேறிச் செல்கின்றன

பச்சைக் குதிரைத் தாண்டுவதைப் போல

பாவத்தை வெளிக்காட்டாமல்

சந்தோசமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது பாலம்

*****

No comments:

Post a Comment