வீர தீர வாழ்வில் வரலாற்றுப் பதிவுகள்
குழந்தையின் வாயில் பூட்டி
மண் தின்னும் குழந்தையோ என்றால்
அடிக்கடி பால் கேட்கும் குழந்தையாம்
மூக்கில் வழியும் சளியை
லிட்டர் குவளையில் பிடித்தால்
மூன்று லிட்டர் தேறும்
நையென்றுதான் இருக்கிறது
அதன் சக்திக்கு அதிகமாக அழுகிறது
பத்து நிமிஷம் கேட்டால்
கேட்பவர் சக்தி குறைந்து
விடும்
குழந்தைகள் அப்படித்தான்
வருங்காலத்தில் பெண் பிள்ளைகளிடம்
வழியும் போது
மூக்கு வழிந்ததைச் சுட்டிக்
காட்டினால்
ரொம்பவே வெட்கப்பபடுவான்
ஜட்டி இல்லாமல் திரிந்ததைச்
சொன்னால்
இன்னும் சங்கோஜப்படுவான்
அதற்காகவே சிறுகுழந்தைகளைப்
பார்க்கையில்
குறிப்பெழுதிக் கொள்கிறேன்
வருங்காலத்தில் விஷேஷமாயிருக்கும்
மரவட்டையைப் பிடித்துத் தின்ற
கதையைச் சொன்னால்
*****
No comments:
Post a Comment