நீங்கள் நல்லவராக
என்னவோ
வருபவர்கள் எல்லாம் வருபவர்களைப்
போலத் தெரியவில்லை
மீந்தவைகளுக்கு உரிமை கொள்ளவும்
வருகிறார்கள்
எவ்வளவு மகிழ்ச்சி அவர்கள்
முகத்தில்
எதுவும் மீந்துப் போகாத விழாக்களில்
எவ்வளவு கொடூரம் அவர்கள்
முகத்தில்
பார்த்தால் உங்களுக்குத்
தெரியும்
பார்க்காவிட்டால் எப்படித்
தெரியும்
நீங்களும் மீந்து போவதற்காக
வருவோர் என்றால்
உங்களுக்கு எதுவும் தெரியாது
வயிற்றுக்கு ஈந்தது போக
தொந்திக்கு ஈந்தாலன்றி நிறைவு
பெறாது ஈகை
தயவுசெய்து ஒவ்வொரு விழாவிலும்
போட்டது போக
ஒரு பார்சலும் பரிசாகக் கொடுக்க
முடியுமா என்று பாருங்கள்
பார்சல்கள் நல்லன
நீங்களும் நல்லவர் எனப் போற்றப்படுவீர்
சர்க்கரைக்கும் கொழுப்புக்கும்
கொதிப்புக்கும்
அவர்கள் சொந்த செலவில் வைத்தியம்
செய்து கொள்வார்கள்
*****
No comments:
Post a Comment