12 Jul 2022

மெல்ல கொளுத்தும் திரை வானம்

மெல்ல கொளுத்தும் திரை வானம்

கொளுத்தும் கோடையில்

மின்வெட்டுப் போக மற்ற நேரங்களில்

பனிமலையில் ஆடும்

நாயகனையும் நாயகியையும்

காட்சித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

உள்ளுக்குள் புழுங்கும் வெக்கை புரியாது

கொஞ்சூண்டு ஆடையில்

பனிமலையில் ஆடும் நாயகிக்காக

உருகிப் போகிறாள் மனைவி

கோர்ட் சூட்டோடு சதா சர்வ காலமும்

நடந்து கொண்டிருக்கும் நாயகனைக்

கற்பனையில் எண்ணிய படி

நீரருந்தும் காலம் உணவருந்தும் காலம்

உறங்கும் காலம் கழிவறைக்குச் செல்லும் காலம் குறித்து

நினைத்து நினைத்து வேர்த்துப் போகிறேன் நான்

தண்ணீர் லாரி வந்து நின்று சத்தம் எழுப்பும் போது

நாயகன் சண்டைக் காட்சிக்குத் தயாராகி விடுகிறான்

நாயகி மயக்கம் போட்டு விழத் தயார் ஆகிறாள்

ஒரு குடம் தண்ணீரோடு திரும்பி வரும் போது

கிளைமாக்ஸ் காட்சியைக் காட்டிக் கொண்டிருக்கும் திரை

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...