4 Jul 2022

குற்றாலக் குளியலஞ்சி

குற்றாலக் குளியலஞ்சி

குற்றாலம் சுற்றுலா என்றார்கள்

எல்லாரும் போகும் போது

நாம் மட்டும் போகாமல் இருப்பதெப்படி

ஐந்து சீட்டு பிடித்துக் கொடுத்தால்

ஒரு சீட்டு இலவசம் எனும் போது

ரொம்ப பெரிய ஷவர் பாத்

மக்கள் குளித்து பல நாட்கள் ஆனது போல

குளிக்கிறார்கள் குளிக்கிறார்கள்

குளித்துக் கொண்டே இருக்கிறார்கள்

ஆயில் பாத் வேண்டுமா என்றார்கள்

எண்ணெய் தேய்த்துக் குளித்தால்

சளி பிடிக்கும் என்றதும் ஓடி விட்டார்கள்

குற்றாலம் வந்தால் அருவியில் குளிக்காமலா

என்று ஆளாளுக்கு வற்புறுத்தினார்கள்

வேற்றூர் தண்ணீர் ஒத்துக் கொள்ளுமா என்றால்

அதற்காகக் குளிக்காமலா என்றார்கள்

நான்கு நாட்களுக்கும்  சேர்த்து

நான் குளித்ததை அவர்களுக்கு ஏன் சொல்ல வேண்டும்

ஐந்து பேர் குளித்தால்

ஒருவர் குளிக்க வேண்டாம் என்றதும்

ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள்

இருக்கையிலும் நடக்கையிலும் அப்படியே நடந்து கொண்டார்கள்

நல்லதாகப் போயிற்று

நெருக்கம் இல்லாமல்

இறுக்கம் இல்லாமல்

கசகசப்பு இல்லாமல்

குளிக்காமல் இருப்பதிலன்றோ இருக்கிறது

குற்றாலம் சுற்றுலாவின் ரகசியம்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...