10 Jul 2022

மழை நேசம்

மழை நேசம்

எல்லாருக்கும் மழை பெய்கிறது

நாம்தான் வீட்டைக் கட்டி வைத்து

நனையாமல் இருந்து விடுகிறோம்

குடை பிடித்துக் கொண்டு

நனையாமல் போகிறவர்கள் இருக்கிறார்கள்

மழையாடை அணிந்து கொண்டு

நனையாமல் போகிறவர்களையும் குறிப்பிட வேண்டும்

நனைய விருப்பமில்லாத சிலர்

காரில் போகப் பிரியப்படுகிறார்கள்

நனைவதில் விருப்பம் உள்ளவர்கள்

பொதுத்துறை பேருந்துகளில் போகிறார்கள்

இரு சக்கர வாகனங்களில் விரைபவர்கள்

நனைவதில் பிரியம் உள்ளவர்கள்

நடைபாதையில் நனைந்தபடி சென்றால்

மழையின் ஸ்பரிசங்களை நேசிப்பவர்கள்

நனைய மறுப்பவர்களை விட்டு விடலாம்

மூக்கிலிருந்து மழை பெய்வதை விரும்பாதவர்கள் அவர்கள்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...