2 Jul 2022

பரபரக்கும் ஊடகங்கள்

பரபரக்கும் ஊடகங்கள்

பரபரப்பிற்காகச் சாகடிக்கிறார்கள்

இன்னும் சாகவில்லை என்று தெரிந்ததும்

தவறுக்காக வருத்தம் தெரிவிக்கிறார்கள்

எதிர்ப்புகள் அதிகமானால்

மன்னிப்பு கேட்கிறார்கள்

அரைக்கம்பத்தில் கொடி பறக்கும்

அவலத்தைப் பரபர செய்தியாக்கிப் பார்க்கிறார்கள்

அமைதியாக நடக்குமென்றால்

அதைச் செய்தியாக்குவது கடினமென்று

கலவரத்தைத் தூண்ட முடியுமா என்று பார்க்கிறார்கள்

கலவரத்தைத் தூண்டுபவர்கள்

அமைதியாக இருப்பதைப் பார்த்து கலவரமாகிறார்கள்

குளிர்சாதன அறை வியர்க்கும் அளவுக்கு

மூளையைக் கசக்கிப் பிழிந்து

பரபரப்பைப் பிரசவிக்கப் பார்க்கிறார்கள்

ஓர் அறுவை சிகிச்சையின்றி

எதுவும் சாத்தியமாகாது என்று புலப்பட

தீவிர சிகிச்சைப் பிரிவில்

தலைவர் அவர்கள்

பிழைத்துப் பிழைத்துச் செத்துக் கொண்டிருப்பதாகச்

செய்தி வெளியாகிறது

சிறிது நேரத்தில் செய்தி திருத்தப்பட்டு

தலைவர் அவர்கள்

செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருப்பதாகச்

செய்தி வெளியாகிறது

*****

No comments:

Post a Comment

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி!

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி! இருமொழிக் கொள்கையே தேவையில்லாத ஆணி எனும் போது மும்மொழிக் கொள்கை குறித்து என்ன சொல்வது? தாய்மொழி வழி...