2 Jul 2022

வயதுகளின் வரிசை

வயதுகளின் வரிசை

இரண்டு முயல்கள் வளர்த்தோம்

இரண்டு முயல்களும்

மாதம் தவறாது இரண்டு குட்டிகள் ஈன்றன

ஈன்ற இரண்டு குட்டிகளும்

மாதம் தவறாது இரண்டு குட்டிகள் ஈன்றன

ஈன்ற குட்டிகளின் ஈன்ற குட்டிகளும்

மாதம் தவறாது இரண்டு குட்டிகள் ஈன்றன

இரண்டு நான்கானது

நான்கு எட்டானது

எட்டு பதினாறானது

வாங்கி வந்த முதலிரண்டு முயல்கள்

இப்போது எதுவென்று தெரியாது போனாலும்

இப்போதும் வாலிபமாய் இருக்கின்றன

குட்டிகளைப் பார்த்து பார்த்து

பாவம் பண்ணைக்காரர்கள் நாங்கள் வயதாகிப் போனோம்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...