8 Jul 2022

வெயிலன்றி விளையாட்டேது

வெயிலன்றி விளையாட்டேது

ஏனிந்த வெயில் இப்படி அடிக்கிறது

எத்தனை நாள் கோபம் என்ற கணக்கு

எனக்கு ஏதும் தெரியவில்லை

ஊட்டி கொடைக்கானல் சுவிட்சர்லாந்து

போகாது இந்த வெயில் என்கிறார்கள்

நாம் மட்டும் இளிச்சவாயர்களா என்றால்

நம்மைத்தான் பிடித்திருக்கிறதாம் இந்த வெயிலுக்கு

போன வருடம் வந்த போதே

அடித்துத் துரத்தியிருக்க வேண்டும் என்றால்

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில்

அப்படியெல்லாம் செய்திட முடியாது என்கிறார்கள்

சரி அடித்து விட்டுப் போகட்டும்

ஐஸ்கிரீம் கூல் டிரிங்க்ஸ் ஏதும்

கேட்காமல் இருந்தால் சரி

வற்றல் வடகம் போட்டு

வெயிலில் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுங்கள்

ஒரு கிரிக்கெட் மட்டையும் பந்தையும் கொடுத்தால்

வெயிலோடு சேர்ந்து விளையாடிக் கொள்வார்கள்

பெரியவர்கள் தண்ணீர் பஞ்சம் கருதி

வியர்வையில் குளித்துக் கொள்ளலாம்

வெயில் நல்லது

அம்மன் கோயில் கூழ் குடிக்கலாம்

கொடும்பாவி கட்டி இழுக்கலாம்

சர்பத் கடைகள் போட்டால் நல்ல லாபம் பார்க்கலாம்

பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடலாம்

கனமழை என்றால் ஒரு நாள் விடுமுறை

கனவெயிலுக்குத்தானே ஒரு மாத விடுமுறை

இத்தியாதிகள் இத்தியாதிகள் இப்படி பல மேலும்

எலுமிச்சம் பழங்களை நல்ல விலைக்கு விற்கலாம்

வெயிலின்றி இதெல்லாம் செய்வதேது

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...