21 Jul 2022

பேசத்தான் அழைத்தார்

பேசத்தான் அழைத்தார்

என்னவோ பேசலாம் வா என்றார்

ஏதேதோ பேசினார்

அமெரிக்காவைக் குறை சொன்னார்

ரஷ்யா மேலும் தவறிருப்பதாகச் சொன்னார்

விலைவாசி சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றார்

தலைவர்கள் இப்படி ஊழல் செய்தால்

நாடு எப்படி தாங்கும் என்றார்

தான் ஒரு நாள் உலகின் அதிபர் ஆனால்

எல்லாம் சரியாகும் என்றார்

அப்படி ஒரு பதவி இல்லை என்றதும்

ஒரு நாள் பிரதமர் ஆனால் என்றார்

அப்படி ஒரு படம் வரவில்லை என்றதும்

ஒரு நாள் முதல்வர் கூட போதும் என்றார்

அணு ஆயுதப் பெருக்கம் பாலிதீன் பிரச்சனைகள்

சாக்கடையாகி விட்ட ஆறுகள் பற்றியும்

சொல்லிக் கொண்டு போனார்

ஒவ்வொன்றையும் சொல்லும் போதும்

குரலில் அப்படி ஒரு கம்பீரம்

சரிதான் விடை பெறலாம் போ என்ற போது

மெல்லிய குரலில்

மகளுக்கு வயது நாற்பத்திரண்டு ஆகிறதென்றும்

மாப்பிள்ளை ஒண்ணு பார்த்தலாம் தேவலாம்

என்று முடித்துக் கொண்டார்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...